"தமிழகத்திற்காக விளையாடி அதிக வெற்றி பெற விருப்பம்" - செஸ் ஒலிம்பியாட் 3-வது சுற்றில் வென்ற நந்திதா பேட்டி


தமிழகத்திற்காக விளையாடி அதிக வெற்றி பெற விருப்பம் - செஸ் ஒலிம்பியாட் 3-வது சுற்றில் வென்ற நந்திதா பேட்டி
x

தமிழக வீராங்கனை நந்திதாவுடன் விளையாட இருந்த எதிரணி வீரர் வராத காரணத்தால், நந்திதா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

சென்னை,

சென்னை, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய அணி விளையாடிய அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற 2-வது சுற்று போட்டிகளிலும் இந்திய அணி பெற்று வெற்றி பெற்றது.

இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 3-ம் சுற்று ஆட்டம் இன்று நடைபெற்றது. இந்தியா சார்பில் இந்த போட்டியில் 6 அணிகள் களமிறங்கின. இதில் ஆண்கள் பிரிவில் 3 அணிகளும், பெண்கள் பிரிவில் 3 அணிகளும் பங்கேற்றன.

அப்போது போட்டி தொடங்கிய சில நிமிடங்களில் தமிழக வீராங்கனை நந்திதாவுடன் விளையாட இருந்த எதிரணி வீரர் வராத காரணத்தால், நந்திதா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய நந்திதா, செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு பிறகு தமிழகத்தில் அதிக அளவில் கிராண்ட் மாஸ்டர்கள் உருவாகுவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் தமிழகத்திற்காக விளையாடி அதிக வெற்றிகளை பெற விரும்புவதாக தெரிவித்த அவர், தான் 17 வருடங்களாக செஸ் போட்டிகளில் விளையாடி வருவதாகவும், இதுவரை இந்த அளவு ஆதரவை பெற்றது இல்லை எனவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.


Next Story