தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காஞ்சிபுரம்

தொழிலாளி

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த நாஞ்சிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன். இவரது மகன் அருள் (வயது 18). இவர் பிளஸ்-2 படித்து விட்டு ஓட்டல் ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். வேலை முடித்துவிட்டு தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். நேற்று முன்தினம் அருள் இதே போல் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை

இதனால் அவரது தந்தை தாமோதரன் மற்றும் அவரது அண்ணன் கார்த்திக் இருவரும் சேர்ந்து அருளை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அருள் தனது தாயின் சேலையால் வீட்டின் பின்புறம் உள்ள வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து அருளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து விசாரித்து வருகிறார்.


Next Story