தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர்

தொழிலாளி

திருவள்ளூர் அடுத்த காக்களூர் பழைய கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கக்கன் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 45). கூலி தொழிலாளி. இவர் மது அருந்தும் பழக்கம் கொண்டவர்.

இவருக்கு திருமணமாகி ரேகா என்ற மனைவியும் 4 பிள்ளைகளும் உள்ளனர். நேற்று முன்தினம் ரேகா மற்றும் அவரின் மூத்த மகன் இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். மற்று 3 பிள்ளைகளும் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுவிட்டனர். பள்ளி முடிந்து 3 பிள்ளைகளும் மாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது தந்தை சீனிவாசன் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து தாய் ரேகாவுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தற்கொலை

இதுகுறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் தாலுக்கா சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சீனிவாசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொணடனர். விசாரணையில் சீனிவாசம் சம்பவத்தன்று குடித்துவிட்டு மீண்டும் குடிக்க வேலைக்கு சென்ற மனைவியிடம் பணம் கேட்டு தகராறு செய்ததாக தெரிகிறது. ரேகா பணம் தர மறுக்கவே குடிபோதையில் இருந்த சீனிவாசன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.

இது குறித்து திருவள்ளூர் தாலுக்கா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story