உத்திரமேரூர் அருகே பெற்றோர் கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை


உத்திரமேரூர் அருகே பெற்றோர் கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை
x

உத்திரமேரூர் அருகே பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

செங்கல்பட்டு

கண்டித்தனர்

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த தண்டரை கிராமத்தை சேர்ந்தவர் நாகப்பன். இவரது மகன் அஜித் (வயது 21). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் அஜித்தின் தந்தை நாகப்பன், அவரது தாயார் இருவரும் சேர்ந்து அஜித்திடம் சிறிய சிறிய வேலைக்கு செல்வதை விட ஏதாவது கம்பெனிக்கு செல்லலாமே. ஏன் இப்படி இருக்கிறாய் என்று கண்டித்ததாக தெரிகிறது. நான் இப்படித்தான் இருப்பேன். நான் கூலி வேலைக்கு தான் சொல்வேன் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தற்கொலை

இதனால் மனமுடைந்த அஜித் வீட்டில் ரூ.100 வாங்கி கொண்டு வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை வாங்கி குடித்துவிட்டு வீட்டில் வந்து தூங்கி உள்ளார். நேற்று அதிகாலை 3 மணி அளவில் அவரது வாயில் இருந்து நுரை தள்ளியபடி இருந்ததால் உடனடியாக அவரை உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். உடனடியாக அவரது உடலை தண்டரை கிராமத்திற்கு கொண்டு வந்து விட்டனர்.

இது குறித்து பெருநகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிய வந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ் அஜித் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து இது குறித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story