பருவமழைக்கு முன்பு மேற்கொள்ள வேண்டிய பணிகள் - வார்டு உதவி பொறியாளர்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு


பருவமழைக்கு முன்பு மேற்கொள்ள வேண்டிய பணிகள் - வார்டு உதவி பொறியாளர்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு
x

பருவமழைக்கு முன்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகளின் விவரங்களை அனுப்ப வார்டு உதவி பொறியாளர்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னையில் கடந்த ஆண்டு இறுதியில் பெய்த பருவமழை காரணமாக நகராட்சியின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இதன் காரணமாக இந்த ஆண்டு பருவமழைக்கு முன்பாகவே மழைநீர் வடிகால் பணிகளை முழுவதுமாக செய்து முடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், பருவமழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளின் முழு விவரங்களை அனுப்ப வார்டு உதவி பொறியாளர்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. எங்கெல்லாம் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளது, அதற்கான மாற்று நடவடிக்கைகள் என்ன என்பது தொடர்பான விவரங்களை இந்த மாத இறுதிக்குள் தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


Next Story