சென்னைக்கு நாளை கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை!


சென்னைக்கு நாளை கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை!
x
தினத்தந்தி 14 Nov 2023 11:30 PM IST (Updated: 14 Nov 2023 11:47 PM IST)
t-max-icont-min-icon

கனமழை காரணமாக சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. நாளையும் கனமழை நீடிக்கும் என்பதால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, சென்னையில் பள்ளிகளுக்கும், திருவள்ளூரில் பள்ளி மற்றும் கல்லூரிக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னைக்கு நாளை மஞ்சள் நில எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை காலை 8.30 மணி வரையிலான காலகட்டத்தில் கனமழை பதிவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னையை தவிர, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்ய உள்ளதாக மஞ்சள் நிற எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story