நெல்லையில் பட்டப்பகலில் இளம்பெண் வெட்டிக்கொலை


நெல்லையில் பட்டப்பகலில் இளம்பெண் வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 2 Oct 2023 2:33 PM IST (Updated: 2 Oct 2023 3:18 PM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் காதல் விவகாரத்தில் இளம்பெண் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை,

நெல்லை டவுனில் பேன்சி ஸ்டோரில் வேலை செய்த 18 வயது இளம்பெண் சந்தியா வெட்டிக்கொலை செய்யப்பட்டார். காதல் விவகாரத்தில் கொலை சம்பவம் நடைப்பெற்றுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

கடையில் இருந்து குடோனுக்கு பொருட்கள் எடுக்க சென்ற போது இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. கடைகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயில் அருகே நடந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story