புதுவண்ணாரப்பேட்டையில் இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை - கணவரிடம் விசாரணை


புதுவண்ணாரப்பேட்டையில் இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை - கணவரிடம் விசாரணை
x

புதுவண்ணாரப்பேட்டையில் இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை

சென்னை புதுவண்ணாரப்பேட்டை நாகூரான் தோட்டம் 1-வது தெருவைச் சேர்ந்தவர் செல்வம். இவருடைய மனைவி சுமித்ரா (வயது 24). இவர்களுக்கு மோனித் (8), ரோஹித் (6) என 2 மகன்கள் உள்ளனர். கடந்த 11-ந்தேதி சுமித்ரா, வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுபற்றி காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசார் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இந்தநிலையில் பிரேத பரிேசாதனை அறிக்கையில், சுமித்ரா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. சுமித்ரா தாக்கப்பட்டதில் தலையில் உள்காயம் இருந்ததும், கழுத்து நெரிக்கப்பட்டு இறந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கொலை வழக்காக மாற்றி, இது தொடர்பாக அவரது கணவர் செல்வத்திடம் விசாரித்து வருகின்றனர்.


Next Story