செல்போன்கள் திருடிய வாலிபர் கைது


செல்போன்கள் திருடிய வாலிபர் கைது
x

திண்டிவனத்தில் செல்போன்கள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம்

திண்டிவனம்,

திண்டிவனம் டி.எம்.ஜி.நகரில் நகராட்சிக்கு சொந்தமான காலி இடத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் வீட்டில் தொழிலாளர்கள் சிலர் தங்கி பாதாள சாக்கடை திட்டப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தொழிலாளர்கள் தாங்கள் தங்கியிருந்த வீட்டில் 3 செல்போன்களை சார்ஜ் போட்டு விட்டு சென்றனர். அந்த செல்போன்களை ஜன்னல் வழியாக மர்மநபர் ஒருவர் திருடிச்சென்றார். இது குறித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் செல்போன்களை திருடியது விழுப்புரம் மாவட்டம் ஆ.கூடலூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சரவணன் என்கிற சரவணபாபு (வயது 33) என்பது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story