தமிழக சட்டமன்ற தேர்தலில் நாங்கள் அமைக்கும் பிரதான அணி வெற்றி பெறும் சரத்குமார் பேட்டி
தமிழக சட்டமன்ற தேர்தலில் நாங்கள் அமைக்கும் பிரதான அணி வெற்றி பெறும் சரத்குமார் பேட்டி.
தூத்துக்குடி,
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 6-வது பொதுக்குழு கூட்டம் தூத்துக்குடி அருகே உள்ள திரவியபுரத்தில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதில் பங்கேற்க நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு சரத்குமார் வந்தார். அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க.வோடு 10 ஆண்டுகள் கூட்டணி வைத்திருந்தோம். இதனால் எந்த தேர்தலையும் முழுமையாக சந்திக்க முடியாமல் போய்விட்டது. எங்களுடைய வாக்கு சதவீதம் என்ன என்பதே தெரியாமல் போய்விட்டது.
நாங்கள் உருவாக்கும் பிரதான அணி வெற்றி பெறலாம். நாங்கள் அமைக்கும் பிரதான அணி கூட ஆட்சி அமைக்கும் நிலையும் வரலாம். நாங்கள் அமைப்பது மூன்றாவது அணி அல்ல. பிரதான அணி. இப்போதைய நிலையில் விஜயகாந்த் எங்கள் அணிக்கு வருவதற்கு வாய்ப்பு இல்லை.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு இந்த சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும். ராதிகா உள்பட கட்சி நிர்வாகிகள் யார், யார் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story