சட்டமன்ற தேர்தல்: திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை - மதிமுக அதிருப்தி
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குறித்து மதிமுக அதிருப்தி தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக, திமுக தங்கள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
அதன்படி அதிமுகவில் பாமகவுடன் மட்டும் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. திமுகவை பொருத்தவரை இந்தியன் முஸ்லீம் லீக் கட்சியுடனும், மனித நேய மக்கள் கட்சியுடனும், விசிகவுடனும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை இறுதி செய்துள்ளது. மேலும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த காங்கிரசுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.
இதனிடையே திமுகவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிவு எட்டப்படாத நிலையில், இன்று 2-ம் கட்ட கூட்டணி பேச்சுவார்த்தையில் மதிமுகவின் துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, தேர்தல் பணிச் செயலர் அந்திரிதாஸ் மற்றும் சின்னப்பா, செந்தில் அதிபன் ஆகியோர் அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதிப் பங்கீடு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில் திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குறித்து மதிமுக அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும் திமுகவின் நிலைப்பாட்டை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும், மீண்டும் திமுக அழைத்தால் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் என்றும், மதிமுகவுக்கான அங்கீகாரத்தை தர வேண்டும் என்று திமுகவிடம் கேட்டுக் கொண்டதாகவும் மல்லை சத்யா தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story