தி.மு.க. கூட்டணியில் ஒரு தொகுதியில் ‘உதயசூரியன்’ சின்னம், மற்றொரு தொகுதியில் தனி சின்னத்தில் போட்டி; மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு


தி.மு.க. கூட்டணியில் ஒரு தொகுதியில் ‘உதயசூரியன்’ சின்னம், மற்றொரு தொகுதியில் தனி சின்னத்தில் போட்டி; மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு
x
தினத்தந்தி 6 March 2021 8:36 AM IST (Updated: 6 March 2021 8:36 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. கூட்டணியில் ஜவாஹிருல்லா தலைமையிலான மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த 2 தொகுதிகளிலும் மனிதநேய மக்கள் கட்சி ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று தி.மு.க.தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளோடு கலந்து ஆலோசித்து, முடிவை அறிவிப்பதாக ஜவாஹிருல்லா தெரிவித்தார். இந்தநிலையில் மனிதநேய மக்கள் கட்சி ஆலோசனை கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 2 தொகுதிகளில் ஒரு தொகுதியில் தி.மு.க.வின் ‘உதயசூரியன்’ சின்னத்திலும், மற்றொரு தொகுதியில் தேர்தல் ஆணையம் ஒதுக்கும் தனி சின்னத்திலும் போட்டியிடுவது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தி.மு.க. தலைமைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிதநேய மக்கள் கட்சி முடிவை தி.மு.க.வும் ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது.

 


Next Story