திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது


திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது
x
தினத்தந்தி 11 March 2021 5:56 PM GMT (Updated: 11 March 2021 5:56 PM GMT)

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

சென்னை, 

சட்டமன்றத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலைச்சிறுத்தைகள்,  இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் பல கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. நீண்ட இழுபறிக்கு பின்னர் தொகுதிகள் உடன்பாடு நிறைவுபெற்றது. 

இந்நிலையில் திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.  

இதன்படி மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி அந்த கட்சிக்கு திருப்பரங்குன்றம், கந்தர்வகோட்டை (தனி) திண்டுக்கல், கோவில்பட்டி, அரூர் (தனி), கீழவேளூர் (தனி) ஆகிய 6 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கான உடன்படிக்கை ஒப்பந்தத்தில் மு.க.ஸ்டாலினும், மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனும் கையெழுத்திட்டனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “நாளை மறுநாள் மாநிலக்குழு கூட்டம் நடைபெறும். அதன்பிறகு வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெற மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி உழைக்கும். பாஜக-அதிமுக கூட்டணி தமிழகத்தை நிலைகுலையச் செய்துள்ளது. இதை மையப்படுத்தி எங்கள் தேர்தல் பிரச்சாரம் அமையும்” என்று அவர் தெரிவித்தார்.

Next Story