தி.மு.க. தேர்தல் அறிக்கை: கருணாநிதியின் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை


தி.மு.க. தேர்தல் அறிக்கை: கருணாநிதியின் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை
x
தினத்தந்தி 13 March 2021 5:38 AM GMT (Updated: 13 March 2021 5:38 AM GMT)

தி.மு.க. தேர்தல் அறிக்கையை அண்ணா மற்றும் கருணாநிதியின் நினைவிடத்தில் வைத்து மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

சென்னை, 

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தி.மு.க. மெகா கூட்டணி அமைத்துள்ளது. இதில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, பார்வர்டு பிளாக், தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதித்தமிழர் பேரவை ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. இதன்படி சென்னை அண்ணா அறிவாலயத்தில் 173 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். 

இந்த சூழலில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்படுகிறது. தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ளார். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வாக்காளர்களை கவரும் வகையில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்நிலையில் தி.மு.க. தேர்தல் அறிக்கையை சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதியின் நினைவிடங்களில் வைத்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அவருடன் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனைத்தொடர்ந்து இன்னும் சற்று நேரத்தில் திமுக தேர்தல் அறிக்கையை மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ளார். 

Next Story