பாஜக 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு


பாஜக 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 14 March 2021 5:07 PM IST (Updated: 14 March 2021 5:07 PM IST)
t-max-icont-min-icon

முதற்கட்டமாக 6 வேட்பாளர்களின் பட்டியல் வெளியான நிலையில், தற்போது பாஜகவின் 2ம் கட்ட வேட்பாளார் பட்டியலை செளியிட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாஜக-வுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக தமிழகத்தில் போட்டியிட உள்ள தொகுதிகள் குறித்த பட்டியல் கடந்த மார்ச் 12-ம் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 

அதன்படி, திருவண்ணாமலை, நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு, ராமநாதபுரம், மொடக்குறிச்சி, துறைமுகம், ஆயிரம் விளக்கு, திருக்கோவிலூர், திட்டக்குடி (தனி), கோவை தெற்கு, விருதுநகர், அரவக்குறிச்சி, திருவையாறு, உதகமண்டலம், திருநெல்வேலி, தளி, காரைக்குடி, தாராபுரம் (தனி), மதுரை வடக்கு ஆகிய 20 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் பாஜக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பட்டியலை செய்தியாளர்கள் முன்னிலையில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் வெளியிட்டார். முதற்கட்டமாக 6 வேட்பாளர்களின் பெயர் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது மேலும் 11 பேரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பாஜக வெளியிட்டுள்ள 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் பின்வருமாறு;-

தாராபுரம் (தனி ) -எல்.முருகன்
கோவை தெற்கு - வானதி சீனிவாசன்
காரைக்குடி -ஹெச் .ராஜா
அரவக்குறிச்சி -அண்ணாமலை
நாகர்கோவில் -எம்.ஆர்.காந்தி
ஆயிரம் விளக்கு -குஷ்பு
துறைமுகம் - வினோஜ் பி.செல்வம்
திருவண்ணாமலை - தணிகைவேல்
மொடக்குறிச்சி - சி.கே.சரஸ்வதி
திட்டக்குடி(தனி) - பெரியசாமி
திருவையாறு - பூண்டி வெங்கடேசன்
மதுரை வடக்கு - சரவணன்
குளச்சல் -பி.ரமேஷ்
திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன்
ராமநாதபுரம் -டி.குப்புராமு
விருதுநகர் - பாண்டுரங்கன்
திருக்கோவிலூர் - வி.ஏ.டி.கலிவரதன்

மேலும் 3 வேட்பாளர்களின் பெயர்கள் விரைவில் வெளியிடப்படும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதில் குஷ்பு திமுகவைச் சேர்ந்த எழிலனை எதிர்த்துக் களம் காண்கிறார். அதேபோல, அண்ணாமலை- திமுக இளங்கோவை எதிர்த்தும் வானதி சீனிவாசன் - காங்கிரஸ் மயூரா ஜெயக்குமாரை எதிர்த்தும் போட்டியிடுகின்றனர்.

Next Story