திண்டுக்கல், மதுரை, திருப்பூர் மாவட்டங்களில் மு.க.ஸ்டாலின் 4 நாள் சூறாவளி பிரசாரம் இன்று தொடங்குகிறார்


திண்டுக்கல், மதுரை, திருப்பூர் மாவட்டங்களில் மு.க.ஸ்டாலின் 4 நாள் சூறாவளி பிரசாரம் இன்று தொடங்குகிறார்
x
தினத்தந்தி 15 March 2021 10:05 PM GMT (Updated: 15 March 2021 10:05 PM GMT)

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மதுரை, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் இன்று முதல் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

சென்னை, 
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 20 நாட்களே இருக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பிரசாரத்தை விரைவுபடுத்தி வருகிறது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது வேட்புமனுவை கொளத்தூரில் தாக்கல் செய்தார். தொடர்ந்து அவர் தனது சூறாவளி சுற்றுப்பயண விவரத்தையும் அறிவித்துள்ளார்.

அதன்படி, திருவாரூரில் நேற்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தை தொடங்கினார். இன்று (செவ்வாய்கிழமை) அறந்தாங்கி, ஆலங்குடி, கீரமங்கலம், வீரபாண்டி ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார். தொடர்ந்து நாமக்கல், ராசிபுரம், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு ஆகிய தொகுதிகளிலும் வாக்கு சேகரிக்கிறார்.

திண்டுக்கல்

பின்னர் 17-ந் தேதி காலை திண்டுக்கல் மாவட்டம் நத்தம், வேடசந்தூர், மதுரை மேற்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மத்தியம், மாலை தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், ஸ்ரீபெரும்புதூர், 18-ந் தேதி கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருவள்ளூர், திருப்பத்தூர், காரைக்கடி, சிவகங்கை, மானாமதுரை, புதுக்கோட்டை, விராலிமலை, கந்தர்வகோட்டை.

19-ந் தேதி ஓரத்தநாடு, திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம், திருவையாறு, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருப்பூர் தெற்கு, அவினாசி, திருப்பூர் வடக்கு, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், சூலூர் ஆகிய பகுதிகளில் அவர் பிரசாரம் மேற்கொள்கிறார்.

Next Story