தமிழகத்தில் மீதமுள்ள 4 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு


தமிழகத்தில் மீதமுள்ள 4 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 16 March 2021 4:52 PM GMT (Updated: 16 March 2021 4:52 PM GMT)

தமிழக சட்டமன்ற தேர்தலில் மீதமுள்ள 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

சென்னை, 

தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரேகட்டமாக வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்காக அரசியல் கட்சிகள் வேட்புமனுத்தாக்கல் மற்றும் பிரசாரப் பணிகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றன.

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் முதற்கட்டமாக 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கடந்த சனிக்கிழமை வெளியிட்டது.

இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் மீதமுள்ள 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதன்படி,

விளவங்கோடு - எஸ். விஜயதரணி

வேளச்சேரி - ஜே.எம்.ஹெச். ஹாசன்

மயிலாடுதுறை - எஸ். ராஜகுமார்

குளச்சல் - ஜே.ஜி. பிரின்ஸ்

ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Next Story