சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல்


சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல்
x
தினத்தந்தி 16 March 2021 10:54 PM GMT (Updated: 2021-03-17T04:24:07+05:30)

சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் பிரின்ஸ், விஜயதரணிக்கு மீண்டும் வாய்ப்பு.

சென்னை, 

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி அங்கம் வகிக்கிறது. அந்த கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் முதல் கட்டமாக 21 தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கும் கடந்த 13-ந்தேதியன்று இரவு, அகில இந்திய காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவித்தது. மீதம் உள்ள 4 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் எப்போது அறிவிக்கப்படுவார்கள்? என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்தநிலையில் நேற்று அதற்கு விடை கொடுக்கும் வகையில் 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட தேர்வு செய்யப்பட்டுள்ள வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-

வேளச்சேரி-ஜே.எம்.எச்.ஹசன், மயிலாடுதுறை-எஸ்.ராஜகுமார், குளச்சல்-ஜே.ஜி.பிரின்ஸ், விளவங்கோடு-எஸ்.விஜயதரணி.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இவர்களில் பிரின்ஸ் மற்றும் விஜயதரணி ஆகியோர் அந்தந்த தொகுதிகளில் தற்போது எம்.எல்.ஏ.வாக இருப்பவர்கள். அவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜே.எம்.எச்.ஹசன், முன்னாள் எம்.பி. ஆருணின் மகன் ஆவார். இவர் தமிழக இளைஞர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story