தமிழகத்தில் தேர்தல் பரிசோதனையில் ரூ.265 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் பறிமுதல்


தமிழகத்தில் தேர்தல் பரிசோதனையில் ரூ.265 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 24 March 2021 2:29 AM IST (Updated: 24 March 2021 2:29 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் தேர்தல் பரிசோதனையில் ரூ.265 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் பறிமுதல்.

சென்னை, 

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் கடுமையாக அமல்படுத்தப்படுகின்றன. இதற்காக பறக்கும் படை, கண்காணிப்பு குழு, வருமான வரித்துறையினரைக் கொண்டு வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆதாரம் இல்லாமல் எடுத்துச் செல்லும் பணம், பரிசுப் பொருட்கள் போன்றவற்றை பறக்கும் படை, கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இதுவரை அவர்களால் கைப்பற்றப்பட்ட பணம், பரிசுப் பொருட்கள், மது வகைகள், தங்கம், வெள்ளி நகைகள் போன்றவற்றின் மதிப்பு ரூ.265 கோடியே 45 லட்சமாகும். இதில் கைப்பற்றப்பட்ட பணம் மட்டும் ரூ.115 கோடியாகும்.

இந்த தகவலை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டுள்ளார்.

Next Story