அ.தி.மு.க., பா.ஜ.க. சந்தர்ப்பவாத கூட்டணி: தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்கு பொதுமக்கள் ஆதரவு கே.எஸ்.அழகிரி தகவல்


அ.தி.மு.க., பா.ஜ.க. சந்தர்ப்பவாத கூட்டணி: தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்கு பொதுமக்கள் ஆதரவு கே.எஸ்.அழகிரி தகவல்
x
தினத்தந்தி 25 March 2021 5:35 AM IST (Updated: 25 March 2021 5:35 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க., பா.ஜ.க. சந்தர்ப்பவாத கூட்டணி: தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்கு பொதுமக்கள் ஆதரவு கே.எஸ்.அழகிரி தகவல்.

சென்னை, 

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பெட்ரோல் விலையை லிட்டருக்கு 16 காசுகள் குறைத்து ரூ.93-ம், டீசல் விலை லிட்டருக்கு 16 காசுகள் குறைத்து லிட்டருக்கு ரூ.86.29-க்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு மக்களின் துயரத்தைத் துடைக்கக்கூடியதல்ல. பெட்ரோலை லிட்டருக்கு ரூ.44 ஆகவும், டீசலை லிட்டருக்கு ரூ.38 ஆக நிர்ணயித்தால் மட்டுமே உண்மையான விலை குறைப்பு. இதை எல்லாம் நம்பி தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள். குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தாமல் இருக்க அழுத்தம் கொடுப்போம் என அ.தி.மு.க தமது தேர்தல் அறிக்கையில் கூறியிருக்கிறது. ஆனால், அமல்படுத்தியே தீருவோம் என பா.ஜ.க. உறுதியாக தெரிவித்துவிட்டது. இப்போது என்ன சொல்லப் போகிறது அ.தி.மு.க.

ஊழலில் ஊறித் திளைத்த அ.தி.மு.க. ஆட்சியை பாதுகாக்க வேண்டுமென்ற நோக்கத்தில்தான் பா.ஜ.க.வோடு அ.தி.மு.க. கூட்டணி அமைத்திருக்கிறது. இந்த கூட்டணிக்கு எந்த கொள்கையும் கிடையாது. இது ஒரு அப்பட்டமான சந்தர்ப்பவாத கூட்டணி. தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு அமோக ஆதரவளித்து வெற்றி பெறுகிற வகையில் வாக்களிக்கப் போகிறார்கள் என்பது நாளுக்கு நாள் உறுதியாகி வருகிறது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story