மத்திய அரசுக்கு மாநில அரசு அடிமையாக இருக்கக்கூடாது முத்தரசன் பிரசாரம்


மத்திய அரசுக்கு மாநில அரசு அடிமையாக இருக்கக்கூடாது முத்தரசன் பிரசாரம்
x
தினத்தந்தி 29 March 2021 2:31 AM IST (Updated: 29 March 2021 2:31 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசுக்கு மாநில அரசு அடிமையாக இருக்கக்கூடாது முத்தரசன் பிரசாரம்.

சேலம், 

சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் டாக்டர் தருணை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக உரிமைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் மதசார்பற்ற கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும். மத்திய அரசுடன், மாநில அரசு ஒத்துப்போக வேண்டும். ஆனால் மத்திய அரசுக்கு மாநில அரசு அடிமையாக இருக்கக்கூடாது. இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் சேலம் உருக்காலை கொண்டு வரப்பட்டது. அதனை தனியார் மயமாக்க கூடாது. பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்த்து கொடுக்க கூடாது. பொதுத்துறை நிறுவனங்களை ஆடு, மாடு விற்பனை செய்வதுபோல் விற்று வருகின்றனர். இதுவரை 24 சதவீதம் விற்று விட்டனர்.விமான போக்குவரத்தும், தனியாருக்கு விற்க பட உள்ளது. காரணம் என்னவென்று கேட்டால் வங்கியில் வாங்கிய கடனை செலுத்த முடியவில்லை. ஆதலால் அதனை ஈடு செய்ய தனியாருக்கு விற்பதாக தெரிவிக்கின்றனர். இதை தடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்-அமைச்சராக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story