தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் ராணுவத்தினர், போலீசார் விண்ணப்பிக்கலாம்
தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு ஏப்ரல் 6-ந் தேதி நடைபெறுகிறது. இதில் பாதுகாப்பு பணிக்கு, முன்னாள் ராணுவத்தினர், போலீசார், தீயணைப்பு வீரர்கள், சிறைத்துறையினர், விண்ணப்பிக்கலாம்.
சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு ஏப்ரல் 6-ந் தேதி நடைபெறுகிறது. இதில் பாதுகாப்பு பணிக்கு, முன்னாள் ராணுவத்தினர், போலீசார், தீயணைப்பு வீரர்கள், சிறைத்துறையினர், விண்ணப்பிக்கலாம். இவர்கள் ஏப்ரல் 4-ந் தேதி முதல், 7-ந் தேதிவரை 4 நாட்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். விருப்பம் உள்ளவர்கள் அருகில் உள்ள காவல் நிலையங்களில், உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பணியில் சேரலாம்.
பணி செய்யும் நாட்களில், அவர்களுக்கு உரிய சம்பளம் மற்றும் போக்குவரத்து, உணவு படிகளும் வழங்கப்படும், என்று டி.ஜி.பி. அலுவலகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக, இந்த பணியில் சேருவதற்கு அவ்வளவு ஆர்வமாக யாரும் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இந்த பாதுகாப்பு பணிக்கு 30 ஆயிரம் பேர் வரை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால், பயமில்லாமல் இந்த பாதுகாப்பு பணியில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story