ஆறு, ஏரி, குளங்களைத் தூர்வாருவதற்குப் பதிலாக கஜானாவை தூர்வாரி விட்டார்கள் டி.டி.வி.தினகரன் கடும் தாக்கு
ஆறு, ஏரி, குளங்களைத் தூர்வாருவதற்குப் பதிலாக கஜானாவை தூர்வாரி விட்டார்கள் டி.டி.வி.தினகரன் கடும் தாக்கு.
திருப்பூர்,
திருப்பூர் மடத்துக்குளத்தில் அ.ம.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் திறந்த வேனில் நின்றபடி பேசியதாவது:-
ஆளுங்கட்சியினர் தொண்டர்களையோ, கூட்டணியையோ, மக்களையோ நம்பாமல் காந்தித் தாத்தாவை (பணம்) மட்டுமே நம்பியுள்ளனர். பணத்தை கொடுத்து உங்களையெல்லாம் சந்தையில் வாங்குவது போல ஆடு மாடுகளைப்போல விலைக்கு வாங்கி விடலாம் என்று எண்ணியிருக்கிறார்கள். அவர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்.
நமது கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தான் தமிழ்நாட்டிலுள்ள ஊழல் ஆட்சியை ஒழிக்க முடியும். மக்கள் விரோத ஆட்சியை ஒழிக்க முடியும்.
இவர்களால் முதியோர் உதவித்தொகையை ஒழுங்காக கொடுக்க முடியவில்லை. இவர்கள் அறிவித்துள்ள இலவசங்களை கொடுக்க வேண்டுமானால் மாதத்துக்கு ரூ.4 ஆயிரம் கோடி, வருடத்துக்கு ரூ.50 ஆயிரம் கோடி வேண்டும். ஏற்கனவே ஆறு, ஏரி குளங்களைத் தூர் வாருவதற்குப் பதிலாக கஜானாவை தூர் வாரி விட்டார்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story