‘நான் ஓட்டுக்காக நிற்கவில்லை, நாட்டுக்காக நிற்கிறேன்’ பிரசார கூட்டத்தில் சீமான் பேச்சு
மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் கணேஷ்குமார் என்பவரை ஆதரித்து போரூரில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்டார்.
பூந்தமல்லி,
மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் கணேஷ்குமார் என்பவரை ஆதரித்து போரூரில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், ஆட்சி மாற்றம் என்பது தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளை மாறி, மாறி ஆட்சியில் அமர்த்துவது இல்லை. அப்படி செய்தால் ஆட்கள் மாறுவார்கள். நிர்வாகம் மாறாது. மழை நீரை வீட்டில் சேமிக்க சொல்லும் நீங்கள் நாட்டில் எவ்வளவு சேமிக்கிறீர்கள். ஆண்டுக்கு 4 ஆயிரம் டி.எம்.சி. மழை பெய்கிறது.
4 ஆயிரம் டி.எம்.சியில் 1,500 டி.எம்.சி.நீர் மட்டும் சேமிக்கப்பட்டு, மீதமுள்ள அனைத்தும் கடலில் விட்டு விடுகிறோம். 150 டி.எம்.சி. தண்ணீருக்கு கர்நாடகாவிடம் கையேந்தி நிற்கிறோம், இந்த நீரை சேமிக்க என்ன திட்டம் உள்ளது.
வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. 50 ஆண்டுகள் செய்யாத நல்லதை அடுத்த வர 5 ஆண்டுகளில் எப்படி செய்வார்கள் என நம்புகிறீர்கள். கல்வி மானுட உரிமை, அதை கொடுப்பது அரசின் கடமை, மருத்துவம், குடிநீர் ஆகியவற்றை இலவசமாக வழங்க வேண்டும்.
விருப்பமிருந்தால் எங்களுக்கு ஓட்டு போடுங்கள். நான் ஓட்டுக்காக நிற்கவில்லை. நாட்டுக்காக நிற்கிறேன். தி.மு.க., அ.தி.மு.க .வெற்றி என்பது நிகழ்வு, நாம் தமிழர் வெற்றி என்பது வரலாற்றின் மாபெரும் புரட்சி. மாறுதலுக்கான தேர்தலாக எடுத்து கொள்ளுங்கள் என தெரிவித்தார்.
Related Tags :
Next Story