பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில் நாளை அமித்ஷா பிரசாரம்
பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில் நாளை அமித்ஷா பிரசாரம்.
சென்னை,
அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர், மத்திய மந்திரிகள் மற்றும் பா.ஜ.க. தேசிய தலைவர் உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர். தொடர்ந்து இன்று (புதன்கிழமை) உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கோவை தெற்கு மற்றும் விருதுநகரில் பிரசாரத்தில் ஈடுபடுகின்றார். அதேபோல் மத்திய பாதுகாப்பு மந்திரி ஊட்டி மற்றும் தளி தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிரசாரம் செய்கிறார். தொடர்ந்து 1-ந்தேதி (நாளை) மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அரவக்குறிச்சி மற்றும் ஆயிரம்விளக்கு தொகுதிகளில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
மேற்கண்ட தகவல்களை பா.ஜ.க. நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story