துறையூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் இந்திராகாந்திக்கு கொரோனா


துறையூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் இந்திராகாந்திக்கு கொரோனா
x
தினத்தந்தி 2 April 2021 3:20 AM IST (Updated: 2 April 2021 3:20 AM IST)
t-max-icont-min-icon

துறையூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் இந்திராகாந்திக்கு கொரோனா ஆஸ்பத்திரியில் சிகிச்சை.

திருச்சி, 

திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக டி. இந்திரா காந்தி (முன்னாள் எம்.எல்.ஏ.) போட்டியிடுகிறார். இந்திராகாந்தியின் கணவர் தங்கமணி. வங்கி அதிகாரியான இவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து வாக்கு சேகரிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு இருந்த இந்திராகாந்தியும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்தார். அப்போது அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்திரா காந்தி நேற்று திருச்சி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை மாலை திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகில் நடந்த அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற பிரசார கூட்டத்தில் இந்திராகாந்தி கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story