தமிழக சட்டசபை தேர்தல்: கொரோனா பாதுகாப்பு உடையுடன் வாக்களித்தார் கனிமொழி எம்.பி.


தமிழக சட்டசபை தேர்தல்: கொரோனா பாதுகாப்பு உடையுடன் வாக்களித்தார் கனிமொழி எம்.பி.
x
தினத்தந்தி 6 April 2021 1:36 PM GMT (Updated: 6 April 2021 1:36 PM GMT)

சென்னை மயிலாப்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் கொரோனா பாதுகாப்பு உடையுடன் கனிமொழி எம்.பி. வாக்களித்தார்.

சென்னை,   

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடந்து வருகிறது. இந்த சூழலில் கொரோனாவின் இரண்டாம் அலை பரவ தொடங்கிய உள்ள காரணத்தால் அனைவரும் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருந்தது. 

இதனிடையே மாலை 6 மணிமுதல் கொரோனா நோயாளிகள் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், கொரோனா பாதுகாப்பு உடை அணிந்துவந்து மக்களவை உறுப்பினரும் திமுக மகளிரணி தலைவருமான கனிமொழி எம்.பி. வாக்களித்தார் 

முன்னதாக தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி கடந்த சில வாரங்களாக தீவிர பரப்புரையில் ஈடுபட்ட கனிமொழிக்கு கடந்த 3ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையிலும், ஆம்புலன்ஸ் மூலம் வந்து சென்னை மயிலாப்பூர் வாக்குச்சாவடியில் கனிமொழி, தனது வாக்கை பதிவுசெய்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்.

Next Story