கேரளா சட்டமன்ற தேர்தல்: பாலக்காடு தொகுதியில் மெட்ரோமேன் ஸ்ரீதரன் முன்னிலை
கேரள சட்டமன்ற தேர்தலில் சிபிஎம் தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் 140 உறுப்பினர் கொண்ட சட்டசபைக்கு கடந்த மாதம் 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் பா.ஜனதா இடையே பலத்த போட்டி நிலவியது.
தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் சிபிஎம் தலைமையிலான இடதுசரி முன்னணி 80 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 55 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 2 இடங்க்ளில் முன்னிலை வகிக்கிறது. பாலக்காடு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட மெட்ரோமேன் ஸ்ரீதரன் முன்னிலை வகிக்கிறார்.
Related Tags :
Next Story