சேலம் மாவட்டம் 11 சட்டசபை தொகுதிகளில் 9 தொகுதிகளில் அதிமுக கூட்டணி முன்னிலை


சேலம் மாவட்டம்  11 சட்டசபை தொகுதிகளில் 9 தொகுதிகளில் அதிமுக கூட்டணி முன்னிலை
x
தினத்தந்தி 2 May 2021 12:30 PM IST (Updated: 2 May 2021 12:30 PM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டசபை தொகுதிகளில் 9 தொகுதிகளில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர்.

சேலம் 

மாநிலம் முழுவதும் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தற்போது  சேலம் மாவட்டத்தில் குறைந்து 4 வது சுற்றும் அதிகபடசமாக 8 வது   சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தச் சுற்றுகளில் அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் அதிக இடங்களில் முன்னணி வகிக்கின்றனர்

சேலம் தெற்கு, வீரபாண்டி, ஆத்தூர், கெங்கவல்லி, எடப்பாடி, ஏற்காடு, ஓமலூர் ஆகிய 7 சட்டசபி தொகுதியில் அதிமுக வேட்பாளர்கள் முன்னேறி வருகின்றனர். மேலும், அதிமுக கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த பாமக வேட்பாளர்கள் சேலம் மேற்கு, மேட்டூர் தொகுதியில் முன்னிலையில் உள்ளனர்.

எடப்பாடி சட்டசபை தொகுதியில் போட்டியிடும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 8வது சுற்று முடிவில் திமுக வேட்பாளரை விட சுமார் 27 ஆயிரம் வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

சேலம் வடக்கு, சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

Next Story