கத்தாருடனான ஒப்பந்தத்தை ஏற்க இதர நாடுகள் மறுப்பு

தங்களது கவலைகளுக்கு கத்தார் அமெரிக்க தீவிரவாத நிதித் தடுப்பு ஒப்பந்தம் போதாது என்று கூறி நான்கு அரேபிய நாடுகள் சமாதானமாகப் போக மறுத்துள்ளன.
துபாய்
அமெரிக்க செயலர் ரெக்ஸ் டில்லர்சன் இந்த சமாதான முயற்சியில் கடும் சவாலை சந்தித்து வருகிறார்.
நான்கு நாடுகளையும் சமாதான பேச்சு வார்த்தைக்கு சம்மத்திகச் செய்வது அவருக்கு பெரும் சவாலாக இருக்கிறது.
சவூதி, யூஏஇ, பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகியவை தாங்கள் இது சம்பந்தமாக எழுப்பியிருந்த கோரிக்கைகளின் அடிப்படையிலேயே கத்தாருடன் ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.
ஜெட்டாவில் இந்த நான்கு நாடுகளுடன் பேச்சு நடத்த டில்லர்சன் அங்கு செல்கிறார். இந்த நான்கு நாடுகளும் கத்தாரும் அமெரிக்காவின் கூட்டாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
நான்கு நாடுகளும் 13 கோரிக்கைகளை முன் வைத்துள்ளன. அவற்றில் ஈரானுடனான தொடர்பை துண்டித்தல், அல்-ஜசீரா தொலைக்காட்சியை மூடுதல், துருக்கியின் ராணுவ முகாமை மூடுதல், கத்தாரில் வசிக்கும் தீவிரவாத குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்களை கையளித்தல் ஆகியவை அடங்கியுள்ள சில கோரிக்கைகள் ஆகும்.
அமெரிக்காவின் பெரிய ராணுவ முகாம் கத்தாரிலுள்ளது. எனவே அமெரிக்கா ஐவரையும் இணைத்துச் செல்ல வேண்டும். ஆனால் நான்கு நாடுகளும் கத்தாரின் மீது நம்பிக்கைக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்ய வேண்டும். எனவே அமெரிக்காவின் அணுகுமுறை கத்தாருக்கு மட்டுமே சாதகமாக இருப்பது போல் தெரிகிறது என்று ஆட்சேபம் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவின் கவலை கத்தாரை விலக்கி வைப்பதன் மூலம் அது மேலும் ஈரானுடன் நெருக்கமாகி தனது பிரதேசத்தை அதன் ராணுவ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த அனுமதிக்கலாம் என்பதேயாகும். இதனால் அமெரிக்கா கத்தாரிலிருந்து தனது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வது பாதிக்கப்படும் என்றும் கவலைகொண்டுள்ளது.
Related Tags :
Next Story






