நோய் அறிகுறியுடன் சீனாவில் மேலும் 15 பேருக்கு கொரோனா


நோய் அறிகுறியுடன் சீனாவில் மேலும் 15 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 3 Jun 2020 1:30 AM IST (Updated: 3 Jun 2020 12:42 AM IST)
t-max-icont-min-icon

நோய் அறிகுறியுடன் சீனாவில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பீஜிங்,

சீனாவில் கொரோனா வைரசின் பிறப்பிடமான உகான் நகரில் புதிதாக 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அனைவருமே நோய் அறிகுறியுடன் பாதிப்புக்கு உள்ளானவர்கள் என்று அந்நாட்டு சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட 15 பேரில் 5 பேர் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக உகான் நகரில் தினந்தோறும் எந்தவித அறிகுறியும் இல்லாமல் சிலர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வந்தனர். இதனால் நகரில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முதன் முறையாக அறிகுறி இல்லாத பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story