ஆஸ்திரேலியா: நெடுஞ்சாலையில் சென்ற 6 கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்து - பெண் பலி


ஆஸ்திரேலியா: நெடுஞ்சாலையில் சென்ற 6 கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்து - பெண் பலி
x

ஆஸ்திரேலியாவில் நெடுஞ்சாலையில் சென்ற 6 கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதிய விபத்தில் சிக்கி பெண் பலியானார்.

கான்பெரா,

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணம் சிட்னியில் உள்ள நெடுஞ்சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற கார் மீது மோதியது. இதனையடுத்து பின்னால் வந்த கார்களும் அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கின. ஒன்றன்பின் ஒன்றாக மொத்தம் 6 வாகனங்கள் மோதிக் கொண்டன.

இந்த சங்கிலித்தொடர் விபத்தில் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் இருவர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அங்கு சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story