#லைவ் அப்டேட்ஸ்: 100-வது நாளை எட்டும் போர்: உக்ரைனில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷியா


#லைவ் அப்டேட்ஸ்: 100-வது நாளை எட்டும் போர்: உக்ரைனில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷியா
x

Image Courtesy: AFP

தினத்தந்தி 31 May 2022 9:29 PM GMT (Updated: 2 Jun 2022 12:08 AM GMT)

கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்ற ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகிறது.


Live Updates

  • 31 May 2022 9:30 PM GMT    100-வது நாளை எட்டுகிறது

    உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தொடுத்து வரும் போர் 100-வது நாளை எட்ட உள்ளது. கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்ற ரஷிய படைகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருவதால் போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்நு வருகிறது.

    ஒருவேளை டான்பாஸ் பிராந்தியத்தை ரஷிய படைகள் கைப்பற்றினால் அது இந்த போரில் ரஷியாவுக்கு மிகப்பெரிய வெற்றியாக அமையும். இதனால் அந்த பிராந்தியத்தில் உக்ரைன் கட்டுப்பாட்டில் இருக்கும் நகரங்கள் மீது ரஷிய போர் விமானங்கள் விடியவிடிய குண்டு மழை பொழிந்து வருகின்றன.

    இதனால் கிழக்கு உக்ரைனின் நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. நேற்று முன்தினம் கிழக்கு உக்ரைனில் உள்ள மிகப்பெரிய மற்றும் தொழில் நகரமான செவிரோடொனெட்ஸ்க் நகருக்குள் ரஷிய படைகள் நுழைந்துவிட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.


Next Story