தென் ஆப்பிரிக்காவில் கொள்ளை கும்பலுடன் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 18 பேர் சுட்டுக்கொலை

Image Courtesy : AFP
துப்பாக்கிச்சூட்டில் கொள்ளை கும்பலைச் சேர்ந்த 18 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஜோகன்னஸ்பர்க்,
தென் ஆப்பிரிக்காவின் லிம்போபோ மாகாணத்தில் வங்கிகளுக்கு பணம் எடுத்துச் செல்லும் வாகனத்தை மறித்து பணத்தை கொள்ளையடிக்க ஒரு கும்பல் திட்டமிட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது போலீசார் மீது கொள்ளை கும்பலைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து போலீசார் பதில் தாக்குதல் நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூட்டில் கொள்ளை கும்பலைச் சேர்ந்த 16 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் உள்பட மொத்தம் 18 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story