நிகரகுவா நாட்டில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 19 பேர் உயிரிழப்பு

Image Courtesy: AFP
காயமடைந்த 26 பேரை மீட்பு படையினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
மனாகுவா,
மத்திய அமெரிக்க நாடான நிகரகுவாவின் மாதகல்பா பகுதியில் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 70-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். ராஞ்சோ கிரான்டேவில் உள்ள மன்செரா ஆற்றின் மீது அமைந்துள்ள பாலத்தில் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் பாலத்தின் தடுப்புச்சுவர் மீது வேகமாக மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 19 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் 10 பேர் குழந்தைகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 26 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
Related Tags :
Next Story






