இந்திய வம்சாவளியை சேர்ந்த 2 சிறுவர்கள் விபத்தில் இறந்த வழக்கு - 2 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு


இந்திய வம்சாவளியை சேர்ந்த 2 சிறுவர்கள் விபத்தில் இறந்த வழக்கு - 2 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு
x

இந்திய வம்சாவளியை சேர்ந்த 2 சிறுவர்கள் விபத்தில் இறந்த வழக்கில் 2 பேர் குற்றவாளிகள் என இங்கிலாந்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

லண்டன்,

இங்கிலாந்தின் வோல்வெர்காம்ப்டன் என்ற இடத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்து ஒன்றில், இந்திய வம்சாவழியை சேர்ந்த 10 வயது சிறுவன் சஞ்சய் மற்றும் 2 வயது சிறுவன் பவான்வீர் சிங் ஆகியோர் உயிரிழந்தனர். அவர்களின் தாயார் இந்த விபத்தில் காயம் அடைந்தார்.

இந்த விபத்தை ஏற்படுத்திய முகம்மது சுலைமான்கான் (வயது 27) என்பவர் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. கடந்த வாரம் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அதேபோல இந்த வழக்கில் தொடர்புடைய பிர்மிங்காமை சேர்ந்த முகம்மது ஆசிம் கான் (வயது35) போலீசாரிடம் பொய்கூறி வழக்கை திசைமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த வெஸ்ட் மிட்லாண்டு கோர்ட்டு, குற்றம்சாட்டப்பட்ட இருவரையும் குற்றவாளிகள் என்று அறிவித்தது. அவர்களுக்கு தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.


Next Story