அமெரிக்காவில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் கொரோனாவுக்கான முதல் தடுப்பூசி செலுத்தப்படும் - அதிபர் டிரம்ப்


அமெரிக்காவில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் கொரோனாவுக்கான முதல் தடுப்பூசி செலுத்தப்படும் - அதிபர் டிரம்ப்
x
தினத்தந்தி 12 Dec 2020 5:29 AM GMT (Updated: 12 Dec 2020 5:32 AM GMT)

அமெரிக்காவில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் கொரோனாவுக்கான முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன், 

பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. 

இந்நிலையில் அமெரிக்காவில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் கொரோனாவுக்கான முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில் வெளியிட்ட தொலைக்காட்சி உரையில், “அமெரிக்காவில் அனைவருக்கும் பைசர் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும். பைசர் தடுப்பூசியை அவசரகால அடிப்படையில் பயன்படுத்த எப்.டி.ஏ அனுமதி அளித்ததற்கு வரவேற்பு தெரிவித்துக் கொள்கிறேன். அமெரிக்காவில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் கொரோனாவுக்கான முதல் தடுப்பூசி செலுத்தப்படும். மூத்த குடிமக்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசி செலுத்தப்படும்” என்று அதில் தெரிவித்தார். 



Next Story