2025ம் ஆண்டுக்கு பின் மோட்டார் பைக்குகளுக்கு தடை; ஹனோய் நகரம் முடிவு


2025ம் ஆண்டுக்கு பின் மோட்டார் பைக்குகளுக்கு தடை; ஹனோய் நகரம் முடிவு
x
தினத்தந்தி 7 Dec 2021 10:02 AM GMT (Updated: 7 Dec 2021 11:16 AM GMT)

வியட்னாம் நாட்டின் ஹனோய் நகரில் 2025ம் ஆண்டுக்கு பின் மோட்டார் பைக்குகளுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.



ஹனோய்,

வியட்னாம் நாட்டின் ஹனோய் நகரில் வருகிற 2025ம் ஆண்டுக்கு பின் முக்கிய மாவட்டங்களில் மோட்டார் பைக் உபயோகத்திற்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதுபற்றி ஹனோய் நகர நிர்வாகம் தயாரித்துள்ள திட்ட அறிக்கையின்படி, ட்ரூவாங் சா, ஹோவாங் சா மற்றும் தேசிய நெடுஞ்சாலை 5 ஆகிய 3 ரிங் ரோடு பகுதியில் அமைந்த அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த தடை அமல்படுத்தப்படும்.  திட்டமிட்டதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பே இதனை நடைமுறைப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

போக்குவரத்து நெருக்கடி மற்றும் புகை வெளியேற்றம் ஆகியவற்றை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.  2030ம் ஆண்டுக்கு பின்னர் இந்த தடையானது 4வது ரிங் ரோடு பகுதி வரையிலான அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும்.

அந்நாட்டின் தலைநகரில் 56 லட்சம் மோட்டார் பைக்குகள் இயக்கப்படுகின்றன.  குறிப்பிடத்தக்க அளவிலான பொது போக்குவரத்து இல்லாத நிலையில், தனி நபர்கள் வாகனங்களை பயன்படுத்துவது அதிகரித்து உள்ளது.


Next Story