கொரோனா வைரஸ் குறித்த கூடுதல் தரவுகள்: சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பு கோரிக்கை


கொரோனா வைரஸ் குறித்த கூடுதல் தரவுகள்: சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பு கோரிக்கை
x
தினத்தந்தி 21 Dec 2021 2:11 AM GMT (Updated: 21 Dec 2021 2:11 AM GMT)

கொரோனா வைரசின் தோற்றம் குறித்த கூடுதல் தகவல்களை சீன அரசு வெளியிட வேண்டும் என டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.

ஜெனீவா,

கொரோனா வைரசின் தோற்றம் குறித்த கூடுதல் தரவு மற்றும் தகவல்களை வெளியிட வேண்டும் என  சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனாவின் மாறுபாடான ஒமைக்ரான், டெல்டா வகையை விட வேகமாக பரவி வருகிறது எனவும்  இது தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என  டெட்ரோஸ் அதானோம் கூறியிருந்தார். 

இது குறித்து அவர் , "நோயிலிருந்து மீண்டவர்களையும் ஒமைக்ரான் தாக்கி வருகின்றது. இது தற்போது டெல்டாவை விட வேகமாக பரவி வருவதற்கான ஆதாரங்கள் உள்ளது. இதன் மூலம் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களும், நோயிலிருந்து மீண்டவர்களும், மீண்டும் ஒமைக்ரானால் பாதிக்கப்படலாம் " என தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் அவர் தற்போது சீன அரசுக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார். அதில் "கொரோனாவின் தோற்றத்தை கண்டறியும் வரை கடினமான நாட்களை நாம் கடந்து தான் ஆக வேண்டும். கொரோனா வைரசின் தோற்றம் குறித்த கூடுதல் தரவு மற்றும் தகவல்களை சீன அரசு வெளியிட வேண்டும்.

கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து அறியும் வரை நாம் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டும், நாம் கடினமாக உழைக்க வேண்டும். ஏனென்றால் எதிர்காலத்தில் சிறப்பாகச் வாழ , தற்போது நடக்கும் விஷயங்களில் இருந்து  நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story