நியூயார்க்: புத்தாண்டு தொடக்கத்தில் அசுர வேகத்தில் பரவிய கொரோனா!


நியூயார்க்: புத்தாண்டு தொடக்கத்தில் அசுர வேகத்தில் பரவிய கொரோனா!
x
தினத்தந்தி 2 Jan 2022 10:02 AM GMT (Updated: 2 Jan 2022 10:02 AM GMT)

அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் புத்தாண்டு தொடக்கத்தில் கொரோனா பரவல் விகிதம் புதிய உச்சத்தை எட்டியது.

நியூயார்க்,

அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில்  புத்தாண்டு கொண்டாட்டங்கள் வழக்கமான முறையில் இல்லாமல், குறைந்த அளவிலான பொதுமக்கள் மட்டுமே பொது இடங்களில் கூட அனுமதிக்கப்பட்டனர். அங்கு கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கொரோனா பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து நியூயார்க்  மாநிலத்தில் மட்டும் இதுவரை 61 ஆயிரத்து 242 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஆண்டின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை அன்று, நியூயார்க்  மாநிலத்தில் 85 ஆயிரத்து 476 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூல்ம், ஒரே நாளில் 10 சதவீதம் அதிகமாக பதிப்பு பதிவாகியுள்ளது. மாநிலத்தில் கொரோனா பரவல் வேகம் 22.2 சதவீதமாக உள்ளது.

அன்று ஒரே நாளில் 88 பேர் பலியாகினர்.89.2 சதவீதம் பேர் முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ள போதிலும் உயிரிழப்புகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 8,451 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா அச்சம் காரணமாக நியூயார்க் நகரின் டைம்ஸ் சதுக்கத்தில் அமைக்கப்பட்டிருக்கும் நடமாடும் பரிசோதனை மையத்தில், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். மேலும், 2ம் மற்றும் 3ம் தவணை தடுப்பூசி போட தகுதியான பொதுமக்கள் அனைவரும் விரைந்து தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுமாறு நியூயார்க் மாநில கவர்னர் கேத்தி ஹோச்சுல் தெரிவித்தார்.

Next Story