சார்க் மாநாடு விவகாரம்: இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு


சார்க் மாநாடு விவகாரம்: இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 7 Jan 2022 7:35 PM GMT (Updated: 7 Jan 2022 7:35 PM GMT)

இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான உறவு விரிசலால் சார்க் மாநாடு நடத்தப்படவில்லை.

இஸ்லாமாபாத், 

சார்க் உச்சி மாநாடு 2016-ம் ஆண்டு பாகிஸ்தானில் நடக்க இருந்த நிலையில் உரி ராணுவ தளம் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதன் காரணமாக இந்தியா அதில் பங்கேற்க மறுப்பு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து மாநாடு ரத்து செய்யப்பட்டது.

பின்னர் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு விரிசலால் இந்த மாநாடு இன்னும் நடத்தப்படவில்லை. எனினும் இந்த ஆண்டு அந்த மாநாட்டை நடத்த பாகிஸ்தான் விருப்பம் தெரிவித்தது. இதில் நேரடியாக பங்கேற்க முடியாவிட்டாலும், காணொலி முறையிலாவது பங்கேற்குமாறு இந்தியாவுக்கு பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்தது. ஆனால் இந்த வேண்டுகோளை மத்திய அரசு நிராகரித்தது.

இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் இந்தியாவை பாகிஸ்தான் குறைகூறியுள்ளது. சார்க் செயல்முறைகள் சுமுகமாக நடைபெறுவதற்கு இந்தியா இடையூறு செய்வதாக பாகிஸ்தான் வெளியுறவு செய்தி தொடர்பாளர் ஆசிம் இப்திகார் குற்றம் சாட்டினார்.

இந்தியாவின் கிட்டப்பார்வை மனோபாவம், பிராந்திய ஒத்துழைப்புக்கான மதிப்புமிக்க தளத்தை பெரிய அளவில் செயலிழக்கச் செய்துள்ளது என்றும் அவர் கூறினார்.

Next Story