சீனா-ரஷ்யா இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கை: தைவான் கடும் கண்டனம்..!


சீனா-ரஷ்யா இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கை: தைவான் கடும் கண்டனம்..!
x
தினத்தந்தி 5 Feb 2022 8:04 PM GMT (Updated: 5 Feb 2022 8:04 PM GMT)

சீனா-ரஷ்யா இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கைக்கு தைவான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பீஜிங்,

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்க தயாராகி வருவதாக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், ரஷ்ய அதிபர் புதின் நேற்று சீனாவுக்கு சென்று அந்நாட்டின் அதிபர் ஜின்பிங்கை நேரில் சந்தித்து பேசினார்.

ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவுக்கு முன்பாக இருநாட்டு தலைவர்களும் தலைநகர் பெய்ஜிங்கில் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது, உக்ரைன் பிரச்சினை, கொரோனோ தொற்று உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து தலைவர்கள் விவாதித்தனர்.

இந்நிலையில் சீன அதிபர் ஜின்பிங், ரஷிய அதிபர் புதின் இடையே நடந்த பேச்சுவார்த்தைக்கு பின் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில் ரஷியா, ஒரே சீனா கொள்கையை ஆதரிப்பதாகவும், தைவானின் சுதந்திரத்தை எதிர்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரஷியாவுக்கு, தைவான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த கூட்டறிக்கை சீன அரசாங்கத்தின் ஆணவம் மற்றும் கொடுமைப்படுத்துதல் மீதான தைவான் மக்களின் வெறுப்பை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், சீன கம்யூனிஸ்ட் ஆட்சியின் ஆக்கிரமிப்பு, விரிவாக்கம் மற்றும் அமைதிக்கு சேதம் விளைவிக்கும் மோசமான முகத்தை உலக நாடுகள் அனைத்திற்கும் தெளிவாகக் காட்டுகிறது என்று தைவான் தெரிவித்துள்ளது. 

Next Story