சீனாவில் பஸ் வெடித்து ஒருவர் பலி; 42 பேர் காயம்


சீனாவில் பஸ் வெடித்து ஒருவர் பலி; 42 பேர் காயம்
x
தினத்தந்தி 13 Feb 2022 8:02 PM GMT (Updated: 13 Feb 2022 8:02 PM GMT)

சீனாவில் பஸ் ஒன்று வெடித்ததில் ஒருவர் பலி; 42-பேர் காயம் அடைந்துள்ளனர்.

பெய்ஜிங்,

வடகிழக்கு சீனாவில் நேற்று முன்தினம் பஸ் ஒன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 42 பேர் காயமடைந்தனர்.

லியோனிங் மாகாணத்தில் ஷென்யாங் நகரில் ஒரு பஸ் திடீரென வெடித்துள்ளது. வெடிப்பு ஏற்பட்டபோது பெரும் சத்தம் கேட்டதாகவும் ஆனால் பேருந்து தீப்பிடிக்கவில்லை என்றும் நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 2 பேர் பெரும் காயமடைந்துள்ளனர். மேலும் 40 பேர் காயமடைந்துள்ளனர்.

பேருந்தின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்த நிலையில் பெரும் குப்பைச் சிதறலுடன் பஸ் சாலையோரத்தில் நிற்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

பஸ் வெடிப்பிற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story