ரஷ்யாவில் புதிதாக 1,79,284 பேருக்கு கொரோனா பாதிப்பு..!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 16 Feb 2022 11:22 PM IST (Updated: 16 Feb 2022 11:22 PM IST)
t-max-icont-min-icon

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,79,284 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாஸ்கோ,

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. 

இதுவரை உலக அளவில் 41.71 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 58.61 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் மற்றும் ஓமைக்ரான் பரவலால், நாடு முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்நிலையில் அந்நாட்டு சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,79,284 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 1,46,59,880 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா தொற்றுக்கு ஒரேநாளில் மேலும் 748 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 3 லட்சத்து 42 ஆயிரத்து 383 ஆக உயர்ந்துள்ளது.

ரஷ்யாவில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 1,16,43,393 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 26,74,104 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
1 More update

Next Story