இலங்கை: பயங்கரவாத தடைச்சட்டத்தை திரும்பப்பெற மனித உரிமை ஆணையம் வலியுறுத்தல்..!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 16 Feb 2022 10:01 PM GMT (Updated: 16 Feb 2022 10:01 PM GMT)

இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் வலியுறுத்தி உள்ளது.

கொழும்பு, 

இலங்கையில் கடந்த 1979-ம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது. பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக ஒருவரை சந்தேகத்தாலே அவரை விசாரணையின்றியே கைது செய்ய இந்த சட்டம் வழிவகுக்கிறது. இதனால் அப்பாவிகள் பலர் இந்த சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே இந்த சட்டத்தை நீக்க வேண்டும் என்று அங்குள்ள தமிழர்கள், முஸ்லிம்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக தற்போது கைெயழுத்து இயக்கம் ஒன்றையும் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், சர்ச்சைக்குரிய இந்த சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என இலங்கை அரசுக்கு அந்த நாட்டு மனித உரிமை ஆணையம் வலியுறுத்தி உள்ளது.

இது குறித்து ஆணையத்தின் தலைவரான நீதிபதி ரோகிணி மாரசிங்கே கூறுகையில், ‘இந்த சட்டத்தின் மூலம், அரசியல்-சித்தாந்தம் அல்லது மத காரணத்திற்காக அப்பாவி பொதுமக்களை குறிவைப்பது வெளிப்படையாக உள்ளது’ என தெரிவித்தார். முன்னதாக ஐரோப்பிய கூட்டமைப்பு மற்றும் ஐ.நா. மனித உரிமை ஆணையம் போன்றவை இந்த சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என இலங்கை அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story