போர் விமானத்தை சுட்டு வீழ்த்த முயற்சி: சீனாவுக்கு, ஆஸ்திரேலியா கடும் கண்டனம்


போர் விமானத்தை சுட்டு வீழ்த்த முயற்சி: சீனாவுக்கு, ஆஸ்திரேலியா கடும் கண்டனம்
x
தினத்தந்தி 20 Feb 2022 5:04 PM GMT (Updated: 20 Feb 2022 5:04 PM GMT)

சீன போர்க்கப்பல் ஆஸ்திரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சியதாக ஆஸ்ரேலியா ராணுவம் முன்தினம் குற்றம் சாட்டியது.

கான்பெர்ரா, 

சீனாவின் உகான் நகரில் முதல் முறையாக கண்டறியப்பட்ட கொரோனா வைரசின் மூலத்தை அறிய சீனாவிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஆஸ்திரேலிய வலியுறுத்தியது. இதற்கு எதிர்வினையாற்றிய சீன அரசு ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை உயர்த்தியது. இதன் விளைவாக சீனா மற்றும் ஆஸ்திரேலியா இடையே சமீப ஆண்டுகளாக மோதல் போக்கு நீடிக்கிறது.

இந்த நிலையில் சீன போர்க்கப்பல் ஆஸ்திரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சியதாக ஆஸ்ரேலியா ராணுவம் நேற்று முன்தினம் குற்றம் சாட்டியது. வடக்கு ஆஸ்திரேலியாவின் அரபுரா கடலில்​சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது போர் விமானத்தில் இருந்த வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் ஆஸ்ரேலியா ராணுவம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் ஆஸ்திரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளியை பாய்ச்சியது சீனாவின் மிரட்டல் நடவடிக்கை என கூறி ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் உள்ளது. இது ஒரு மிரட்டல் செயலே தவிர வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற மிரட்டல் செயல்களை ஆஸ்திரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’’ என்று கூறினார்.



Next Story