உக்ரைன் பாதுகாப்பு அமைச்சம் மீது ரஷிய படைகள் தாக்குதல்


உக்ரைன் பாதுகாப்பு அமைச்சம் மீது ரஷிய படைகள் தாக்குதல்
x
தினத்தந்தி 24 Feb 2022 11:37 AM GMT (Updated: 24 Feb 2022 11:37 AM GMT)

உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவுத்துறை தலைமையகத்தில் ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது.

கிவ்,

உக்ரைன் மீது ரஷியா இன்று போர் தொடுத்துள்ளது. தரைவழி, வான்வெளி மூலம் உக்ரைன் தலைநகர் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் ரஷிய பாதுகாப்பு படையினர் குண்டுமழை பொழிந்து வருகின்றனர். 

ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த தாக்குதலால் இருதரப்பிலும் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் என 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகத்தின் மீது ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது. தலைநகர் கிவ்வில் உள்ள பாதுகாப்பு அமைச்சகம் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளது. பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவுத்துறை தலைமையகத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

Next Story