உச்சகட்ட போர்: உக்ரைனில் இதுவரை 210 அப்பாவி மக்கள் பலி..!!


உச்சகட்ட போர்: உக்ரைனில் இதுவரை 210 அப்பாவி மக்கள் பலி..!!
x
தினத்தந்தி 28 Feb 2022 1:04 AM GMT (Updated: 28 Feb 2022 1:04 AM GMT)

கடந்த 4 நாட்களில் நடைபெற்று வரும் போரில் உக்ரைனில் 210 அப்பாவி மக்கள் பலியாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீவ், 

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரில் நேற்று காலை வரையில், அதாவது 4 நாளில் 210 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 1,100 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதை உக்ரைன் அரசு உயர் அதிகாரி லியுட்மிலா டெனிசோவா தெரிவித்தார். இது குறித்து அவர் சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட்ட பதிவில், " இதுவரைபார்த்திராத கொடுமையாக குடியிருப்பு கட்டிடங்கள், ஆஸ்பத்திரிகள், மழலையர் பள்ளிகள், பள்ளிக்கூடங்கள் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளன" என தெரிவித்துள்ளார். கீவ் ஆஸ்பத்திரி குண்டுவெடிப்பில் ஒரு குழந்தை கொல்லப்பட்டதையும், கார்கிவ் குடியிருப்பு ஒன்றில் பெண் ஒருவர் கொல்லப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.


Next Story