எல்லைப்பிரச்சினையில் ‘இந்தியாவுடனான பேச்சு ஆக்கப்பூர்வமானது’ - சீனா


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 31 March 2022 7:02 PM GMT (Updated: 31 March 2022 7:02 PM GMT)

எல்லைப்பிரச்சினையில் இந்தியாவுடனான பேச்சு மிகவும் ஆக்கப்பூர்வமானது என்று சீனா கருத்து தெரிவித்துள்ளது.

பீஜிங், 

சீன தலைநகர் பீஜிங்கில் ராணுவ அமைச்சக செய்தி தொடர்பாளர் உ கியான் நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், “எல்லையில் அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீன தரப்பில் இருந்து இந்தியா கடுமையான சூழ்நிலையை சந்தித்து வருகிறது என இந்தோ-பசிபிக் விவகாரங்களுக்கான அமெரிக்க துணை பாதுகாப்பு மந்திரி ஏலி ராட்னர் கூறி இருக்கிறாரே?” என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு சீன ராணுவ அமைச்சக செய்தி தொடர்பாளர் உ கியான் பதில் அளிக்கையில், “எல்லை பிரச்சினையை பேச்சுவார்த்தை, ஆலோசனை மூலம் சரியாக கையாள்வது என்று சீனாவும், இந்தியாவும் ஒப்புக்கொண்டுள்ளன. 3-ம் தரப்பினரின் தலையீட்டை உறுதியாக எதிர்க்கின்றன” என குறிப்பிட்டார். 

மேலும், “கடந்த 11-ந் தேதி இரு தரப்பினரும் நடத்திய 15-வது சுற்று பேச்சுவார்த்தை நேர்மறையாகவும், ஆக்கப்பூர்வமாகவும் அமைந்தது. எஞ்சி உள்ள பிரச்சினைகளில் தீர்வு காண்பது, அமைதி மற்றும் வளர்ச்சியை மேம்படுத்த உதவும் என்று இரு தரப்பினரும் வலியுறுத்தினர்” எனவும் தெரிவித்தார்.


Next Story