சமூக ஊடக தளங்களுக்கான தடை முற்றிலும் பயனற்றது: பிரதமரின் மகன் பதிவு


image courtesy:  NamalSLfb
x
image courtesy: NamalSLfb
தினத்தந்தி 3 April 2022 10:29 AM GMT (Updated: 3 April 2022 10:29 AM GMT)

இலங்கை அரசின் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட அனைத்து சமூக ஊடக தளங்களுக்கான தடை முற்றிலும் பயனற்றது என பிரதமரின் மகன் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.




கொழும்பு,



இலங்கை அரசு அந்நாட்டில் பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் யூடியூப் உள்ளிட்ட அனைத்து சமூக ஊடக தளங்களுக்கும் இன்று தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், இலங்கையின் இளைஞர்கள் மற்றும் விளையாட்டு துறைகளை கையாளும் மந்திரி மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷேவின் மூத்த மகனான நமல் ராஜபக்சே, சமூக ஊடகங்களுக்கான தடைகளை மறுபரிசீலனை செய்யும்படி அரசை வலியுறுத்தியுள்ளார்.

இதுபோன்ற தடைகள் முற்றிலும் பயனற்றவை என்று சுட்டிக்காட்டினார்.  தவறான தகவல்கள் பரவாமல் தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டது என அரசு கூறியது.  நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில், சமூக ஊடக தடையை இன்று நீக்குவோம் என இலங்கை அரசாங்கம் கூறியது.


Next Story